3ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
4
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சி இல. 25 கட்சன் வீதியை வதிவிடமாகவும் கொண்டிருந்த பொன்னம்பலம் கிருஸ்ணபிள்ளை அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 28-08-2024
உருவம் கொடுத்து உணர்வு கொடுத்த
நீங்கள் இன்று உணர்வற்றுப்
போனதென்ன ஐயா.
உங்கள் வாழ்க்கை துணையாய்
கரம்பிடித்த எங்கள் அம்மாவை
தனிமையிலே விட்டுச் சென்றீர்களே ஐயனே.
உங்கள் கைப்பிடித்து நடைபழகிய
எங்கள் ஆறு பேரையும் அகிலம்
என கொண்டீர்களே ஐயா.
வாழ்க்கையை கற்று தந்த நீங்கள்
தூரமாகிப்போனதென்ன ஐயா
எம் வாழ்வின் பாதியிலே
மறைந்தாலும் இந்த வாழ்விலும்
உங்கள் நினைவுகள் எம்மைவிட்டு
அகலாது ஐயனே.
உங்கள் ஆத்மா சாந்தியடைய
என்நாளும் இறைவனை
பிரார்த்திக்கின்றோம்.
ஓம்சாந்தி ! ஓம்சாந்தி !!ஓம்சாந்தி!!!
தகவல்:
குடும்பத்தினர்