முல்லைத்தீவு புதுக்குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னையா பாலசிங்கம் அவர்களின் அந்தியேட்டியும், வீட்டுக்கிருத்திய அழைப்பிதழும்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் அந்தியேட்டிக்கிரியைகள் எதிர்வரும் 08-03-2021 திங்கட்கிழமை அன்று நடைபெறும் வீட்டுக்கிருத்திய கிரியைகள் 10-03-2021 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெறவுள்ளதால் அத்தருணம் தாங்களும் தங்கள் குடும்ப சகிதம் வருகை தந்து அன்னாரின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனையிலும் கலந்து கொண்டு அதனை தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறும் அன்புடன் அழைக்கின்றோம்.