யாழ். ஊரெழு கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் தர்மலிங்கம் அவர்களின் அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் அஸ்தி 23-08-2021 திங்கட்கிழமை அன்று கீரிமலை புனித திர்த்தக் கரையில் கரைக்கப்பட்டது. மேலும் ஊரெழு கிழக்கில் உள்ள அன்னாரது இல்லத்தில் 25-08-2021 புதன்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அந்தியட்டிகிரியை முறைப்படி நடைபெறும். நாட்டுச்சூழல் காரணமாக எல்லோருக்கும் அழைப்பு விடுக்கமுடியவில்லை என்பதை எண்ணி வருந்துகின்றோம்.