மரண அறிவித்தல்
தோற்றம் 12 OCT 1937
மறைவு 26 JUL 2021
திரு பொன்னம்பலம் தர்மலிங்கம்
தலைவர்- ஊரெழு ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலயம்
வயது 83
திரு பொன்னம்பலம் தர்மலிங்கம் 1937 - 2021 ஊரெழு கிழக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். ஊரெழு கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் தர்மலிங்கம் அவர்கள் 26-07-2021 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வீரசிங்கம், அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நாகேஸ்வரி(பச்சைமணி) அவர்களின் அன்புக் கணவரும்,

நளாயினி(பிரித்தானியா), பிரசன்னா(SZAI Fitness- உரிமையாளர்), திருமாறன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சுஜீவன், கஜநிதி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான இராசரட்ணம், ஞானசக்தி, சரஸ்வதி, அன்னலட்சுமி, தங்கரத்தினம் மற்றும் மகாலிங்கம், பராசக்தி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான ஜெகநாதலிங்கம், சுந்தரலிங்கம் மற்றும் கணேசலிங்கம், புவனேஸ்வரி, சிவகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மதிவதனி, விக்னேஸ்வரன், சந்திரவதனி, சத்தியவதனி, ஸ்ரீகரன், செந்தூரன், குருபரன், கஜன், பகிதா, நிதர்சனா ஆகியோரின் அன்பு மாமாவும்,

கெளதமன், தரணிகா, சசிகரன், நவநீதன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

அக்‌ஷிகா, அபினாஷ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 28-07-2021 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஊரெழு பொக்கணை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

Live streaming link: Click here

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

நாகேஸ்வரி - மனைவி
நளாயினி - மகள்
பிரசன்னா - மகன்

Photos