Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 12 OCT 1937
மறைவு 26 JUL 2021
அமரர் பொன்னம்பலம் தர்மலிங்கம்
தலைவர்- ஊரெழு ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலயம்
வயது 83
அமரர் பொன்னம்பலம் தர்மலிங்கம் 1937 - 2021 ஊரெழு கிழக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். ஊரெழு கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் தர்மலிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

எங்கள் அன்பு அப்பா எங்கே
இன்று தனிமையில் நாங்கள்
ஏதும் பயமின்றி பட்டாம்பூச்சியாய்
நாங்கள் இருந்தோம் உங்களுடன்

உங்கள் வருகை காணாது
உங்கள் குரல் கேட்காது
ஏங்கி தவிக்கின்றோமே
ஏனப்பா எங்களை
தனிக்க விட்டீர்கள்..?

மின்னாமல் முழங்காமல்
எங்கே அப்பா சென்றீர்கள்...?
பாசமாய் கூடி வாழ்ந்த கூட்டை விட்டு
எங்குதான் பறந்து சென்றீரோ

உம் நினைவால் தினம்
கலங்கி நிற்கின்றோமே!
அழகிய கனவுகள் உங்களோடு போயின
உங்கள் நினைவுகள் மட்டுமே
மீதியாய் இன்று
மீளமுடியாத துயருள் நாங்கள்
முடியுமோ அப்பா நீங்களின்றி வாழ...?

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை வேண்டுகின்றோம்.
ஓம்சாந்தி! ஒம்சாந்தி!! ஒம்சாந்தி!!!

தகவல்: குடும்பத்தினர்

Photos