யாழ். ஊரெழு கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பொன்னம்பலம் தர்மலிங்கம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
வருடங்கள் சில ஓடினாலும்
எங்கள் இதயங்களில் என்றும்
நீங்காமல்
குடியிருக்கும் அப்பாவே!
அன்பிற்கு ஓர் அடையாளமாய்
எங்களை அரவணைத்தீர்கள்!
அப்பாவின் பிரிவுத்துயர் தாழாமல்
உங்கள் திருமண தினத்தன்று
அக்கினியில் நீங்கள் செய்து கொண்ட
சத்தியம் தான் காரணமோ?
அப்பாவோடு நீங்களும் தொடர்ந்து
சென்றது
ஏன் அம்மா?
எங்கள் வீட்டு நிலவாக
ஒளி வீசி மகிழ
வைத்தீரே
யார் கண்பட்டு மறைந்து
போனீரோ
தாமரை மலர் நீரில் ஆடுவதுப்போல
நாங்கள் உமைப்பிரிந்து
தத்தளித்து
மனம் ஆடுகின்றதே அம்மா! அப்பா!
எங்கள் துயரம் விதித்ததோர்
விதியதால்
விண்ணகம்
சென்றதைப்
பொறுத்திட முடியுமோ தான்?
உங்கள் அன்பு முகம் மறைந்தாலும்
அழியாது நினைவலைகள்!
எவ்வளவு காலம் சென்றாலும்
உங்கள் நினைவுகள் எங்களை விட்டு
போகாது
எங்களை விட்டு
நீங்கள் பிரிந்துவிட்டீர்கள்
ஆனால்
அலை அலையாய்
உங்கள் நினைவுகள்
எம் மனதில்
அம்மா! அப்பா!
என்று
அழைத்து விட துடிக்கின்றது..!
நீங்கள் பிரியில்லை
எங்களோடு
வாழ்ந்து கொண்டு
இருக்கின்றீர்கள்
என்றும் உங்கள் நினைவுகளோடு
வாழும் குடும்பத்தினர்!!!!