5ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் பிலிப் போல் வில்சன்
(ரெட்னா)
வயது 66
Tribute
33
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். வேம்படி வீதியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பிலிப் போல் வில்சன் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்புடனும் பாசத்துடனும் எங்களை
பாதுகாத்த தெய்வமே எங்கள்
அனைவரையும் விட்டு பிரிந்தது ஏனோ?
துன்பம் ஏதும் இல்லாமல் கஷ்டங்கள்
ஏதும் இல்லாமல் உங்கள் மலர்ந்த
முகத்துடன் எங்களை உங்கள் கண்
இமைக்குள் வைத்து நாம் வாழ வழி
அமைத்துக் கொடுத்தீர்கள் அப்பா!
எம்மை எல்லாம் ஆயிரம் சொந்தங்கள்
அணைத்திட இருந்தாலும் பெற்ற
தந்தையாகிடுமோ அப்பா?
உங்களைப் போல் அன்பு கொள்ள
யாருமில்லை.. ஐந்து ஆண்டுகள்
சென்றாலும் உங்கள் பாசத்திற்கு பட்ட
கடன் தீராதப்பா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
உங்கள் பிரிவால் வாடும்
மனைவி, பிள்ளைகள்,
மருமக்கள், சகோதரங்கள்
மற்றும் பேரப்பிள்ளை
தகவல்:
குடும்பத்தினர்
அண்ணா ஒராண்டு சென்றாலும், உள்ளத்தால் மறக்கமுடியவில்லை உமது நினைவுகளை உறவு என்று ஒன்றிருந்தால், பிரிவு என்று ஒன்றும் உண்டு உறவு என்பதை மறுக்கவும்...