2ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் பிலிப் போல் வில்சன்
(ரெட்னா)
வயது 66
Tribute
34
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். வேம்படி வீதியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பிலிப் போல் வில்சன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
குடும்பத்தின் ஒளி விளக்காய்
குவலயத்தே மிளிர்ந்தீர்கள்
அன்பு தம்பியே
நீங்கள் எமைப் பிரிந்து
ஆண்டு இரண்டாகி விட்டது
ஆயிரம் ஆயிரம் உறவுகள்
இருந்தாலும் தம்பி என்றழைக்க
நீங்கள் இப்பூவுலகில் இல்லை
இரண்டு வருடங்கள் போனாலும்
மெளனமாக எனக்குள்ளே
என் மனசு அழுவதை நீங்கள் உணர்வீர்கள்
உணர்ந்து கொண்டேயிருப்பீர்கள்!
காலங்கள் கடந்து சென்றாலும்
ஒவ்வொரு நொடிகளிலும்
இதயத்தின் துடிப்பைப் போல்
எங்கள் அருகில் நீங்கள் இருப்பதை
நாங்கள் உணருகின்றோம்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!!!
தகவல்:
குடும்பத்தினர்
அண்ணா ஒராண்டு சென்றாலும், உள்ளத்தால் மறக்கமுடியவில்லை உமது நினைவுகளை உறவு என்று ஒன்றிருந்தால், பிரிவு என்று ஒன்றும் உண்டு உறவு என்பதை மறுக்கவும்...