

நுவரெலியா ஹால்கரனோயா இராகலையைப் பிறப்பிடமாகவும், பண்டாரவளை, கம்பளை, நாவலப்பிட்டி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பிலிப் ஜேசுதாசன் அந்தோணியம்மா அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
மூன்று ஆண்டுகள் உருண்டோடினாலும்
உங்களை மறவாது தவிக்கின்றோம் அம்மா
அன்புடனும் பாசத்துடனும் வளர்த்தெடுத்து
பிள்ளைகளின் நினைவாக வாழ்ந்து..
வாழ்விலும் தாழ்விலும் துணை நின்ற
என் அருமைத் தாயே
வாழ்வு மாயமென்று எமக்கு
உணர்த்தி விட்டுச் சென்றாயோ அம்மா
சிரித்த முகம் மாறாத
சிறுபிள்ளை போன்ற உள்ளம்
உற்றார் உறவினரை - வரவேற்று
உபசரிக்கும் உயர்ந்த குணம்
வாடி நிற்கும் மனிதருக்கும்
சேவை பல செய்தாயம்மா!
அம்மா நாம் மறக்கவில்லை
உம்மை என்றும் நினைப்பதற்கு
ஆறவில்லை நெஞ்சம்
அன்பின் ஈரம் காய்வதற்கு!
உங்கள் ஆத்மா சாந்தி அடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
உங்கள் நினைவால் வாடும்
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், குடும்பத்தினர்
அன்புள்ளம் கொண்ட அம்மம்மாவே! எங்களை விட்டுப்பிரிந்து மூன்று ஆண்டுகள் ஆனாலும் உங்களை மறக்க முடியவில்லையே அம்மம்மா ர.அனன்யா அன்புள்ள பேத்தி