

நுவரெலியா ஹால்கரனோயா இராகலையைப் பிறப்பிடமாகவும், பண்டாரவளை, கம்பளை, நாவலப்பிட்டி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பிலிப் ஜேசுதாசன் அந்தோணியம்மா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எம் விழிகளில் வற்றாத குளமாக நினைவுகளின் சிறுத்துளிகள்....,
குளிர் தாலாட்டும் இராகலை, ஹால்கரனோயா,
நுவரெலியா மண்ணில் தயை நிறை
மைக்கல் சந்தனம் அந்தோனிப்பிள்ளை மரியம்மா தம்பதிகளுக்கு;
நால்வரில் கடைக்குட்டியாய் எழில்நிறை அந்தோணியம்மா,கிரேக், பண்டாரவளை, பூச்சி பாலாயி தம்பதிகளின்
நல் இல்லறத்தில் வந்துதித்த வாணவராயர்களில்
மூன்றாவது புதல்வனாக வதனம் கொண்ட
பிலிப்ஜேசுதாசன் அவர்களை கரம்பிடித்து;
நன் மக்கள் பெற்று நிலவாகி ஒளி தந்தாய் - எம்
நிழலாகினாய் “அம்மா”
உம் பிரிவின் காரணங்கள் ஏனோ? தெரியவில்லை....
உம் அன்புக்கு ஈடு இணை இல்லை தாயே!
யாதுமாகி நின்றாய் எங்கள் இல்லத்து அரசியாக!
நீ இல்லை என்றார்கள்!!
இக்கணமும் எம் மனம் ஏற்கவில்லை அம்மா!!!
வெள்ளை உள்ளம் கொண்ட “அம்மா”
உங்களுக்கு கள்ளம் இல்லா கணவர் எங்கள் “அப்பா “.....
பார்ப்பவர்களை எல்லாம் கொள்ளை கொள்ளும் உன் வதனமும் செயல்களும்...
ஆசையாய் பெற்றெடுத்த - பிள்ளைச்
செல்வங்களில் மண்ணில் வீழ்ந்தது போக
மடியில் தவழ்ந்தது எண்ணவோ “மூன்று முத்துக்கள்”
உற்றார் சொல்வார்கள் “மண்சோறுஉண்டு தான் உன்னுள் நான் வந்தேனாம்”
“ஏறாத கோயிலும் இல்லை,எடுக்காத நோன்பும் இல்லையாம்” - என்றாலும்
கேட்ட வரம் பெற்று என்னை ஈன்றெடுத்ததாயே!
ஈடு இணையில்லலா உன் அன்புக்கு
அத்தோடு விடவில்லை உன் விசுவாசம்
என்னுடன் பிறந்தவர்கள் இரண்டு பேராம்!
இறந்தவர்கள் எத்தனை பேரம்மா?
எல்லா வலிகளையும் நீ சுமந்து
சுகமாக பெற்றெடுக்காமல்
மும்முறை உன் வயிற்றை பிளந்தாய் அப்பப்பா!
எத்துனை வலிநிறைந்த வாழ்வு?
காலங்கள் களிப்புடன் செல்லுகையில்
கண்ணூறு பட்டதுவோ...
நோய் கொண்டு படுத்தார் எம் அப்பா
ஆரம்பமானது விதியின் கோரம், ஆனாலும்
அஞ்சவில்லை எம் வீர பெண்மணியாம்
அந்தோணியம்மா!!! போராடினாள்....
வெற்றிக் கொண்டாள் வாழ்க்கையில்!!!
ஆனாலும் விடவில்லை காலனவன்
உன்னையும் உன் அன்பையும் வென்றான்...
நாம் அப்பாவை இழந்தோம் - அவருடன்
பிறந்தவர்கள் ஊமையானார்கள்....
கலைந்தது உன் கோலம் அம்மா!!!
உன் சேலை முந்தாயைால் - உன்
கவலைகளை கொட்டி தீர்த்தாய்...
யாருமில்லா வேளையில், இதெல்லாம் உனையறியாது கண்டவர்களின் சாட்சிகள்!!
எந்தக் குறையும் வைக்கவில்லை
எம் வாழ்க்கை தரத்தில், எடுத்த பொறுப்பை
செவ்வனே செய்து முடித்த சிங்கப்பெண்ணம்மா நீங்கள்....!!!
இன்றைய நிலைபோல் - தன் பிள்ளையென வாழாமல், அறவே இல்லா நிலையிலும் வரவேற்பாய் அன்போடு எல்லோரையும்,
இதனாலோ என்னவோ - எல்லோரும்
துவண்டு தான் போனார்கள் உன் பிரிவின் துயரில்.....!!!
உன்னை கதிர்காம கந்தன்- இந்தியாவில்
அன்னை வேளாங்கன்னி, சென். தோமையார்.
மேல் மருவத்தூர் அம்மன் அங்காள பரமேஸ்வரி,
திருப்பதி, திருச்செந்தூர், சுவாமிமலை, திருநாகேஸ்வரம்
எண்ணற்ற புனித ஸ்தலங்களும் அழைத்தன.....
மற்றவர்களுக்காக தன்னை வருத்துவதிலும்;
ஈவதிலும் இன்பம் காண்பாய்- எதையும்
செல்வனே செய்து முடிப்பதில் உறுதி காண்பாய்
நீ பட்ட துன்பத்தினை நினைத்ததனாலோ
என்னவோ? இத்தனை பிரியம் உனக்கு...!!!
உயிர் பிரியுமென அறியாத உன் மனம்-அந்நொடியில்
சொல்ல நினைத்தது தான் என்னவோ?
உன் பிள்ளைகளுக்கு இச்சந்தர்பத்தை கூட
மறுத்ததேனோ எங்கள் அன்பு அம்மா?
நீங்கள் சொன்ன வாக்கு; -சத்தியவான்
சாவித்திரியை நினைவில் நிறுத்தியது;
ஏனேன்றால்? யார் தயவிலும் என்னுயிர் பிரியாதென்று`
கடைசியாக எல்லாம் விதியென பொய் சொல்லி
எங்கள் மனங்களை தேற்ற முயன்றோம்;
இந்நொடி வரை எம்மனம்
ஏற்க மறுக்கிறது உங்கள் பிரிவை....
ஏனம்மா எம்மை விட்டு சென்றாய்?
என்று அழுகுரல் தொடர்கிறது..-
எம் விழிகள் உம் விம்பத்துக்காய் ஏங்குகிறது;-
நீ கற்றுக்கொடுத்த பாடங்களை முன்னெடுத்து
உன் நினைவுகளை உயிர்ப்பிப்போம்
என் அழகு தேவைதையே அம்மா!!
எம் குடும்ப குல விளக்கே!!
மண்ணில் வாழ்ந்து விண்ணுலகம் சென்று
தாயே அங்கு உன் துணைவனின் துணையுடன்
நல்வாழ்வு வாழ்ந்து நித்திய இளைப்பாற்றியை அடைவீராக!!!
உங்கள் பிரிவால் துயருறும் பிள்ளைகள்,
மருமக்கள், பேரப்பிள்ளைகள், சகோதரர்கள், உற்றார், உறவினர்கள், நண்பர்கள்
அன்புள்ளம் கொண்ட அம்மம்மாவே! எங்களை விட்டுப்பிரிந்து மூன்று ஆண்டுகள் ஆனாலும் உங்களை மறக்க முடியவில்லையே அம்மம்மா ர.அனன்யா அன்புள்ள பேத்தி