Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
பிறப்பு 07 FEB 1951
இறப்பு 12 MAR 2025
திருமதி பேரின்பராணி தவரத்தினம்
வயது 74
திருமதி பேரின்பராணி தவரத்தினம் 1951 - 2025 எழுதுமட்டுவாழ், Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். எழுதுமட்டுவாழைப் பிறப்பிடமாகவும், இருபாலை அரசடி வீதி, கனடா Markham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பேரின்பராணி தவரத்தினம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

பண்பின் உறைவிடமாய்
பாசத்தின் திருவுருவாய்
மலர்ந்த எம் அருமைத் தாயே!
எல்லோர் மனதிலும்
என்றும் அணையாத சுடராய்
வாழ்ந்து கொண்டிருக்கின்றீர்கள் அம்மா!
31 நாட்கள் அகன்றே நின்றாலும்
அழியாத நினைவலைகள்
எம் அகத்தில் நின்று ஆழத்திலே
வாட்டி வதைக்கின்றது அம்மா!
அன்பின் உருவான தாயே
எம் உயிரினுள் உயிராகி
உறவிலே கலந்து ஏற்றமுடன் நாம் வாழ
ஏணியாக இருந்திடுவீர் அம்மா!
எங்கள் அன்புத் தெய்வத்தின்
ஆத்மா சாந்தியடைய
எல்லாம் வல்ல இறைவனைப்
பிரார்த்திக்கின்றோம்.

அன்னாரின் ஆத்மசாந்திப் பிரார்த்தனை 12-04-2025 சனிக்கிழமை அன்று பி.ப 11:30 மணியளவில் Baba banquet Hall ல் நடைபெறவுள்ளதால் அத்தருணம் தாங்களும் தங்கள் குடும்ப சகிதம் வருகை தந்து அவரது ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதிய போசனத்திலும் கலந்து கொள்ளும் வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம்.நன்றி

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.   
முகவரி:
3300 McNicoll Ave,
Scarborough,ON M1V 5J6 Markham,
Canada 

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 12 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

கண்ணீர் அஞ்சலிகள்