"பாரதி கண்ட புதுமைப் பெண்ணாய், நேர்கொண்ட பார்வையும், நிமிர்ந்த நன்னடையுமாக மிளிர்ந்த பேரிளம் பெண் பேரின்பநாயகி" எங்கள் ஹலோ மாமி. பின் வந்தவர்(எங்கள் அப்பா, பேபி என்றழைக்கும் ஆனந்தராஜா) முன் சென்று, முன் வந்தவரை(ஹலோ மாமியை) பின் அழைத்துக் கொண்டார் தன்னுடன். அன்னாரின் பிரிவால் துயருரும் ஹலோ மாமியின் மழலைச் செல்வங்களுக்கும், மருமக்களுக்கும், அவரின் பேரக்குழந்தைகளுக்கும் மற்றும் குடும்பத்தார்க்கும் எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களையும் ,ஆறுதல்களையும் ,தேறுதல்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம். "எங்கள் ஹலோ மாமியின் நல் ஆத்மா" எல்லாம் வல்ல உமைபாலனின் பாத கமலங்களில் சரணடைந்து இளைப்பாற எங்கள் தமிழ்க் கடவுள் முருகப் பெருமானைப் பணிந்து பிரார்த்திக்கின்றோம். "ஓம் ஸெளம் சரவணபவ ஸ்ரீம் க்ரீம் க்லீம் க்லௌம் ஸௌம் நமஹ" "ஓம் சரவணபவாய நம."
Our deepest condolences to you all, may God give you the strength to get through this.