மன்னார் உயிலங்குளத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Strengelbach ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பற்குணநாதன் இராசதுரை அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
கரம்பிடித்தவளோடு வாழ்வில் பாதியாய் பக்கபலமாய்
இருக்காது பாதியிலே பரிதவிக்க விட்டு மறைந்துபோன
காரணம் தான் என்ன ?
என் வாழ்நாள் முழுவதும் கூடவே இருப்பேன்
என்று கூறியது பொய்யாகிப் போனதே- இன்று
தனிக்க விட்டு சென்று விட்டீரே!
என் அன்புக் கணவரே!
கண்பட்டுக் கலைந்து போனது
எமது வாழ்வின் நிஜங்கள்
காணாமல் உமை மறைத்து
விதி செய்த சதிகள்!!
அன்பான அப்பா உங்கள் முகம் காண
ஏங்கித் துடிக்கின்றோம் எங்களை வழிநடத்தி
அறிவூட்டவேண்டிய நீங்கள் பாதியில் விட்டுச் சென்றதேன்!
சிரித்து வாழ்ந்த காலமெல்லாம்
சிறகடித்துப் பறந்தது
உங்கள் சிரித்த முகம் எப்போது
காண்போம் அப்பா...
கண்ணை மூடி நாங்கள் தூங்க
கனவில் உங்கள் முகம் தெரிகிறதே அப்பா
பாசம் காட்டும் உங்கள் முகத்தை
நாம் யாரிடமும் இன்னும் அறியலையே.....
நீங்கள் எங்களை விட்டு பிரிந்தாலும்
எங்கள் ஒவ்வொரு அசைவிலும்
நீங்கள் வாழ்ந்துகொண்டிருப்பீர்கள்!
என்றென்றும் உங்கள் நினைவோடு
வாழ்ந்து கொண்டிருக்கும்
அன்பு மனைவி,
பிள்ளைகள்(அஞ்சலி, நித்தீஸ், சயன்).
ஆழ்ந்த அனுதாபங்கள். அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்