எப்போதும் சிரித்த முகத்தோடும்
கலகலக்கும் பேச்சோடும்...
பண்பையும்,பாசத்தையும்
மாறாத அன்பையும்
எமக்குத்தந்துவிட்டு-இன்று
எங்கு சென்றுவிட்டீர்கள் மாமியே!!!
பத்து மாதம் சுமக்கவில்லை- ஆனால்
அரவணைக்கும் அன்பிலோ -என்
தாயின் மறு உருவம்கண்டேன்...
நினைவுகளை மீட்கின்றேன்....
நெஞ்சம் கனக்கின்றது கண்களில் நீர் சொரிய....
உங்கள் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்து
கண்ணீர் அஞ்சலியை காணிக்கையாக்குகின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
உங்கள் பிரிவால் வாடிநிற்கும்
-மருமகன் மோகனதாஸ் - சுவிஸ்