யாழ். புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern Köniz ஐ வதிவிடமாகவும் கொண்ட பத்மநாதன் ரூபவதி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
மனதைவிட்டகலாத உன் புன்னகைக்கும் அழகு முகம் காண...
நித்தம் நித்தம் தவிக்கின்றேன் உன் துணையின்றி
உன் மடிமீது சாய்ந்திட தேடுகின்றது என் கண்கள்...
தினம் தினம் உன் கரம் கோர்த்து நடந்திட்ட பாதைகளில்
நீ வருவாயென்று என் இதயம் ஏங்குகின்றது...
இனி நீயின்றி நான் எப்படி வாழ்வேன் தனிமையில்..?
இருந்தும் வாழ்கின்றேன் உன் நினைவுகளோடு!!!
ஆயிரம் உறவுகள் எங்கள் மீது அன்பாக இருந்தாலும்
அம்மா உங்கள் அன்புக்கும், அரவணைப்பிற்கும் எதுவும் ஈடாகாது
எத்தனை ஜென்மம் எடுத்து வந்தாலும்
உங்கள் பிள்ளைகள் ஆகும் வரம் வேண்டும்
எங்கள் அருகில் கடைசி வரை நீ இருப்பாய் என்று
நாங்கள் எண்ணி இருக்க எம் கனவுகளை உடைத்து
வெகு விரைவில் எங்கு சென்று விட்டாய்?
காலத்தால் அழியாத உன் அழகு முகமும், புன்னகையும்
காணாமல் துடியாய் துடிக்கின்றோம்
மீண்டும் ஒரு முறை எப்போது நீ வருவாய்
எங்களை எல்லாம் ஒன்று கூடி அரவணைக்க....
அன்பின் இலக்கணமாய் திகழ்ந்து,
பாசத்தின் வதிவிடமாய் வாழ்ந்து,
வீடு தேடி வந்தோரை இன்முகத்தோடு வரவேற்று,
விருந்தோம்பும் உங்களை இனி எப்போது காண்போம்?
இன்னும் உங்கள் இழப்பை எங்களால்
ஜீரணிக்க முடியாமல் தவியாய் தவிக்கின்றோம்...
உங்களின் ஆன்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.