
யாழ். புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern Köniz ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த பத்மநாதன் ரூபவதி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 10-12-2021
கணவன் மனக்குமுறல்
என்னவளே என் இனியவளே!
உன்னோடு நான் வாழ்ந்த வாழ்க்கை
என் வாழ்வில் நான் இழந்த இந்த இழப்பை
இறைவன் என் வாழ்நாள் முழுவதும்
தாங்க முடியாமல் செய்துவிட்டான்!
தனி மரமாக விட்டு ஏன் அவசரமாக சென்றுவிட்டாய்
இவ்வளவு தான் நம் வாழ்க்கை என்று
காலம் நினைத்துவிட்டதா?
காலங்கள் உருண்டு போனாலும்
கண்முன்னே நிழலாகும் உன் நினைவுகள்
ஒரு போதும் என்னை விட்டு அகலாது!
எத்தனை ஆண்டுகள் ஆனாலும்
உன் நிழலின் நிஜத்தை தேடி
உன் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்!
பிள்ளைகளின் மனக்குமுறல்கள்
அம்மா என்ற சொல்லின் சூட்சுமம் நீ
குடும்பத் தலைவியாய் எங்களின் வழிகாட்டியாய்
நீ இருந்தாய் அம்மா!
நாங்கள் எங்கே எப்படி வாழ்ந்தாலும்- நீயே
எங்கள் வாழ்வின் ஒளி விளக்கு!
பாசத்தின் உறைவிடம் அம்மா நீ நல்ல நேசத்தின்
இருப்பிடம் நீ கருணையின் பிறப்பிடம் நீ
எங்களை அன்பாய் ஆட்சி செய்தவள் நீ
ஓராண்டு ஓடி ஒழிந்தது அம்மா
நித்தமும் உம் நினைவுகள் எங்கள் மனதில் அம்மா
ஆறுதல் கூற ஆயிரம் வார்த்தைகள் இருந்தும் எங்கள் அம்மா குட்டி
பரிவுடன் நீ காட்டிய அன்பினை இனி எவர்தான்
எங்களுக்கு கொடுபார் அம்மா...
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம்!