திதி:11/02/2025
யாழ். கைதடி தெற்கு மானார்வளவைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்டிருந்த பத்மநாதன் பரராஜன் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் குடும்பத்தின் ஒளி
விளக்கே
எங்கள் வாழ்வின்
விடிவெள்ளியே
புன்னகை
பூத்த உங்கள் முகமே..!
ஏங்குகின்றோம் உங்கள் பாசத்திற்காய்
ஆறாத்துயருடன் அன்பையும்
பாசத்தையும் காட்டி
உங்கள் கண்களுக்குள்
வைத்து வழிகாட்டி
வளர்த்தீர்கள்..!
அன்பு தெய்வத்தின் இனிய
நினைவுதனை மனதில்
சுமந்து வாழுகின்றோம்..!
விண்தேடி விரைந்து சென்றதனால்
புண்பட்ட இதயத்தை ஆற்ற
வழியின்றி
கண்ணீரைக்
காணிக்கை ஆக்குகின்றோம்..!
நேற்று நடந்தது போல் நினைப்பு
ஆனால் நான்கு ஆண்டுகள்
நிறைவுற்ற
போதும் என்றும்
உங்கள் நீங்கா நினைவுகள்
எத்தனை ஆண்டுகள் நகர்ந்தாலும்
எங்களை விட்டு அகலாது..!
நாங்கள் உங்களை மறந்தால்
தானே நினைப்பதற்கு
நினைவே
என்றும் நீங்கள் தான்..!
வானுலகம் சென்றாலும் எங்கள்
வழித்துணையாவும் என்றும்
இருந்துவிடுவீர்கள் !!!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!!