கிளிநொச்சி பரந்தன் குமரபுரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட பசுபதி சிறிசாந்தன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
நேர்மையாய் நடந்தவர்கள் சமாதானத்திற்குள் பிரவேசித்து தங்கள் படுக்கையில் இளைப்பாறுகிறார்கள் ஏசாயா 57:2
ஓராண்டு அல்ல
பல நூறாண்டுகள் ஆனாலும்
உங்கள் இழப்பின் வேதனை தீராது தீராது!!
திக்கெட்டும் திகட்டாத
தீவாம் நெடுந்தீவில்
தனிப்பெரும் அடிகளார்
தனியாகலம் வழிவந்த
பாசமகன் பசுபதியும்
பூம்புகராம் பூநகரி தந்த
பொன் மகளாம் பவளமும்
பெற்றெடுத்த பரந்தனூர்
தங்கமகனே!!
தவமிருந்து பெற்ற தாய்க்கு
வரமாய் இருந்தாயே
சாந்தன் என பெயர் சூட்டும்போதே
அதன் மகத்துவம் அறிந்து
வாழ்ந்தவன் போலும்
உலகமே வியக்கிறது-நிதம்
நினைத்தது உன் புகழ்
அன்பான உறவே
அழகான உம் வதனம்
தீராத உம் சிரிப்பு
நிதம்-திகட்டாத உம் பேச்சு
வாழ்க்கையின் அர்த்தம்
சொன்னவனே
நிழலாய் நீர் இருப்பாய்
என்றிருந்தோம்
மரமே சரிந்ததுவே எம் வாழ்வில்
எம் பலமே நீதான் என்றிருக்க
சிலையாய் எமையாக்கி
சென்றதேனோ
கருவில் இருந்த நீ
கல்லரை வரை கூட
இருப்பாய் என நம்பிய உன்
தாயாகிய என்னை தவிக்கவிட்டு
சென்றதெங்கே ??
காதலித்து கரம்பிடித்து
காதல் மொழி பேசி
காலமெல்லாம் கூட இருப்பேனென
உறுதி மொழி பேசி விட்டு
இறுதியாய் ஒன்றும் பேசாமல்
காத்திருக்க என்னை தவிக்க விட்டு
பிரிந்ததெங்கே??
எங்கள் உயிர் அப்பாவே!
தோளிலும் மார்பிலும் சுமந்து
தோழனைப்போல் அரவணைத்து
ஆசானாய் இருந்து அறிவுரைகள்
எடுத்துரைப்பீரே அப்பா!!
நீங்கள் பெற்ற பெரும் செல்வத்தை
பிரிந்ததெங்கே ??
உன் இனிய சோதரரை
உயிரான உடன்பிறப்பை
இதயமே நொந்து அழ
ஏங்கித்தவிக்க விட்டு
சென்றதெங்கே ??
மைத்துனர்கள் யாவரையும்
சிநேகிதராய் சிநேகித்தீர்
மலையே தகர்ந்தது போல்
மனமுடைந்து நொந்து அழ
சென்றதைங்கே??
எமது உறவுகளில் சிறந்த உறவே !
எங்கள் தாய் மாமனே!!
எம்மை உங்கள் பிள்ளைகளைப்போல்
அன்பாலும் அரவணைப்பாலும்
எமக்கு நல் வழிகாட்டிய மாமாவே !!
மருமக்கள் நாங்கள்
மனமுடைந்து மாமா
என ஏங்கிதவிக்கவிட்டு
சென்றதெங்கே ??
பெரியப்பா உமை கண்டு
பெரிதாக அழைக்கும் முன்னே
பெறாமக்கள் இருவரையும்
பிரிந்தின்றுசென்றதெங்கே ??
பேர குழந்தை ஒன்றை
பெருமிதமாய் கண்டீரே
எழில் வதனம் கண்டு
ஏந்தி மகிழ்ந்தின்று
எங்கு சென்றீர் ??
நீ எமக்கு
பொக்கிஷமாய் கிடைத்த
பெரிய சொத்து என்போம்
நீங்கள் எம் உறவாக கிடைக்க
என்ன தவம் செய்தோமோ
சிப்பிக்குள் முத்து என
உம் சின்ன வண்ண
குழந்தைகளில் உனை
காண்போம் - நிதம்
எம்மோடே நீர் வாழ்கின்றீர்
எம் இனிய உறவே
நீர் சென்ற இடம் இறைவனிடம்
அறிந்து கொண்டோம்
இறைவனிடம் நீர் இருப்பீர்-எம்
இதயத்திலும் நீர் இருப்பீர்