31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
கண்மகிழ 05 MAR 1950
கண்நெகிழ 02 JUN 2022
திருமதி பார்வதி அருமைத்துரை
ஓய்வுநிலை குடும்ப நல உத்தியோகத்தர்
வயது 72
திருமதி பார்வதி அருமைத்துரை 1950 - 2022 காரைதீவு, Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அம்பாறை காரைதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பார்வதி அருமைத்துரை அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

உங்களை இழந்து 31 நாட்கள் ஆனாலும்
 உங்கள் ஆசைமுகம், நேசப்புன்னகை மறையவில்லை
 பாரினிலே ஒன்றாய் இருந்து கூடி மகிழ்ந்த
 காலமெல்லாம் மறந்திடுமோ...31 நாட்கள் கழிந்தாலும்
ஓவியமாய் பதிந்திருக்கிறது
உங்கள் முகம்...
உங்கள் பிரிவால் வலிகள் தந்தவளே!
 வசந்தத்தை தொலைத்து தூரமானிர்களே
 உங்கள் புன்னகை காணாது தவிக்கிறோம்...
நாட்கள் பல ஆனாலும் ஆறாது எம் துயரம்
நீங்காது அம்மா எம் மனதில் உங்கள் நினைவு
இன்னொரு பிறப்பு ஒன்று உண்டெனில்
 உங்கள் பிள்ளைகளாக மட்டுமே நாம் பிறந்திட வேண்டும் அம்மா!
உங்கள் ஆத்மா சாந்தி அடைய
இறைவனை வேண்டிநிற்கின்றோம்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உணவுகள் அளித்தவர்களுக்கும், மரணவீட்டில் துன்பபகிர்வில் உரையாற்றியவர்களுக்கும் உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 1 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.