
திதி:28/05/2025
அம்பாறை காரைதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பார்வதி அருமைத்துரை அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
பண்பின் உறைவிடமாய்
பாசத்தின் திருவுருவாய்
மலர்ந்த எம் அருமைத் தாயே!
எல்லோர் மனதிலும் என்றும்
அணையாத சுடராய் வாழ்ந்து
கொண்டிருக்கின்றீர்கள் அம்மா!
அகவை மூன்று அகன்றே நின்றாலும்
அழியாத நினைவலைகள்
எம் அகத்தில் நின்று ஆழத்திலே
வாட்டி வதைக்கின்றது அம்மா!
அன்பின் உருவான தாயே எம்
உயிரினுள் உயிராகி உறவிலே
கலந்து ஏற்றமுடன் நாம் வாழ
ஏணியாக இருந்திடுவீர் அம்மா!
புன்னகை புரியும் உங்கள் முகம்
எமக்கு தினமும் தெரிகிறது ஆனாலும்
அது உண்மை இல்லை என்று நினைத்தபின்
எம் மனம் கலங்குகிறது..!
ஏழேழு ஜென்மங்கள் எடுத்தாலும்
எமக்கு அன்னையாய் பிறந்திடவே
நாம் ஏங்குகிறோம் தாயே!!
எங்கள் அன்புத் தெய்வத்தின்
ஆத்மா சாந்தியடைய எல்லாம்
வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!
We all miss you Kopy Amma. 🥺You are the most kindest person I have ever seen. Rest in peace