1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் பார்வதி அருமைத்துரை
ஓய்வுநிலை குடும்ப நல உத்தியோகத்தர்
வயது 72
Tribute
6
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
அம்பாறை காரைதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பார்வதி அருமைத்துரை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் வீட்டு குல விளக்கே
எமை விட்டு பிரிந்தது ஏனோ
அன்பின் நிறைவிடமே அம்மா
பாசத்தோடும் சிரித்த முகத்தோடும்
கண்ணின் இமை போல் எமை காத்து
துன்ப துயரம் தெரியாது எமை வளர்த்து
தரணியிலே எமை உயரவைத்து
இன்பமுடன் நாம் வாழ வழிகாட்டி
எமை எல்லாம் ஆழாத்துயரில்
ஆழ்த்தி விட்டு சென்று ஆனதம்மா
ஒன்று ஆண்டு காலமதில் உனை பிரிந்து
ஒரு நொடிப்பொழுதும் உனை மறவாமல்
நாம் வாழ்கின்றோம்
ஓயாது உன் நினைவு வந்து வந்து
எதிர் கொள்ள ஒவ்வொரு கணமும்
துடி துடிக்க உயிரோடு வாழ்கின்றோம்
எத்தனை ஆயிரம் உறவுகள் எமை
அணைத்திட இருந்தாலும் அத்தனையும்
எம் அம்மாவுக்கு நிகராகுமா?
ஆண்டுகள் பல ஆனாலும் என்ன
ஆறாது அம்மா எம் துயரம்
நீங்காது அம்மா எம் மனதில் உன் நினைவு...!
தகவல்:
குடும்பத்தினர்
We all miss you Kopy Amma. 🥺You are the most kindest person I have ever seen. Rest in peace