யாழ். வீமன்காமத்தைப் பிறப்பிடமாகவும், மலேசியா Kuala Lumpur ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பரராசசிங்கம் பார்த்தீபன் அவர்களின் 30ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
பெரும் பாரில், பெரு மனிதம் பேசி,
மனிதம் காக்க வந்து,
நீ மனிதம் அறியுமுன்,
உன் மனிதம் கொன்றார்கள்.
இறுதி வரை மனிதம் தேடி
இறைவனடி சேர்ந்தாய்.
வீழ்வார் உயர் அன்பு,
மனிதத்தால் பாரைச் செதுக்கட்டும்.
மனிதம் காக்க வந்து,
நீ மனிதம் அறியுமுன்,
உன் மனிதம் கொன்றார்கள்.
இறுதி வரை மனிதம் தேடி
இறைவனடி சேர்ந்தாய்.
வீழ்வார் உயர் அன்பு,
மனிதத்தால் பாரைச் செதுக்கட்டும்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.