Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 05 SEP 1939
இறப்பு 15 MAY 2024
திருமதி பரமேஸ்வரி சிவானந்தநாயகம்
இளைப்பாறிய இராசயனவியல் ஆசிரியை, யாழ். இந்து மகளிர் கல்லூரி, Amal International School, Kingston International School, கோப்பாய் கிறிஸ்துவ கல்லூரி, மட்டக்களாப்பு Vincent Girls High School, மட்டக்களப்பு Methodist Central College, சாய்ந்தமருது மகாவித்தியாலயம், ஏறாவூர் மகாவித்தியாலயம்.
வயது 84
திருமதி பரமேஸ்வரி சிவானந்தநாயகம் 1939 - 2024 கரவெட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 12 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கலட்டி(குருக்கள் பகுதி) கரணவாய் கிழக்கு கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை, கல்முனை, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி சிவானந்தநாயகம் அவர்கள் 15-05-2024 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா பர்வதம்(செட்டியார் பகுதி- வதிரி) தம்பதிகள் மற்றும் வேலுப்பிள்ளை லஷ்மி(கரவெட்டி கிழக்கு) தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,

காலஞ்சென்றவர்களான சிற்றம்பலம் பத்தினிப்பிள்ளை(தலைமை ஆசிரியர்கள்) தம்பதிகளின் மகளும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை(விரிவுரையாளார்- கோப்பாய் ஆசிரியர் கலாசாலை) செல்லம்மா(அல்வாய்) தம்பதிகளின் மருமகளும்,

காலஞ்சென்ற சிவானந்தநாயகம்(கணித விரிவுரையாளர் பலாலி ஆசிரியர் கலாசாலை) அவர்களின் மனைவியும்,

காலஞ்சென்ற சிவகுமார், காஞ்சனா, பிரேமகுமார், ரஞ்சனா ஆகியோரின் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான இராஜதுரை, Dr. வைத்திலிங்கம் மற்றும் யோகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான குலதிலகமாணிக்கநாயகம், சபாநாயகம், கணேசநாயகம், பத்மநாயகம், செல்வநாயகம் மற்றும் பரமேஸ்வரதேவி, மகேந்திரநாயகம், மகேஸ்வரதேவி, பரமேஸ்வரி, Dr. சுந்தரமூர்த்தி ஆகியோரின் மைத்துனியும்,

காலஞ்சென்ற சிவஈஸ்வரி, மகேஸ்வரி, காலஞ்சென்ற சிவராஜா, இராசம்மா, தில்லைநாதன் ஆகியோரின் சகலியும்,

சுகந்தி, வசந்தி, துஷ்யந்தி, ஷகிலா, கணேஸ், ஷாமினி, மனோகரன், ஜெயகரன் ஆகியோரின் பெரியம்மாவும்,

ரகுராஜ், ரவிராஜ், ரங்கன்ராஜ், தில்லைராஜ் ஆகியோரின் சின்னம்மாவும்,

பத்மினி, பாமினி, கபிலன், சுரேஷ், ரமேஸ், நிரேஸ், வதனா, ரூபன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

லக்‌ஷ்மன், கிருஷ்ணன், ஜெயன், அரன், பிரிட்டிக்கா, லக்‌ஷன், கரிசன், கவின், கணன், ரித்திக்கா, ராகினி, எலினா, தேவன், டிலன், சாமுவேல், எமிலி, புளோரன்ஸ், வர்ணிக்கா, நீலா, ஜஸ்டின் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

சோனியா அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 19-05-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:30 மணியளவில் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு மு.ப 11:00 மணிமுதல் பி.ப 01:00 மணிவரை இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Mrs Parameswary Seevananthanayagam was born in Kaladdi, Karanavai East, Karaveddy and lived in Trincomalee, Kalmunai, Batticaloa, Jaffna and Colombo and passed away peacefully on 15th May 2024.

She was the loving grand daughter of late Ponnaiah and late Parvatham (Vathiri) and late Velupillai and late Lakshmi (Karaveddy East).

Beloved daughter of Sittampalam, Pathinipillai(Head Master) and daughter in law of late Kanapathipillai, late Sellamma(Alvai).

Beloved wife of late Seevananthanayagam.

Loving mother of late Sivakumar, Kanchana, Premakumar, Ranchana.

Beloved Sister of late Rajadurai, late Dr. Vaithilingam, Yoheswary.

Loving sister in law of late Kulathilagamanickanayagam, late Sabanayagam, late Ganeshanayagam, late Pathmanayagam, late Selvanayagam, Parameshwaradevi, Magendranayagam, Maheshwaradevi, Parameshwary, Dr. Suntharamoorthy.

Loving sahali of late Sivaeaswary, Maheshwary, late Sivarajah, Rasammah, Thillainathan.

Loving aunty(Periamma) of Sukanthi, Vasanthi, Dushyanthi, Shakila, Ganesh, Shamini, Manoharan, Jeyakaran.

Loving aunty(Sinnamma) of Raguraj, Raviraj, Ranganraj, Thillairaj.

Loving aunty(Mami) of Padmini, Bamini, Kapilan, Suresh, Ramesh, Niresh, Vathana, Ruban.

Loving grandmother of Lakshman, Krishnan, Jayan, Aran, Pritika, Lakshan, Harrison, Kavin, Kannan, Rithika, Ragini, Elena, Thevan, Dillon, Samuel, Emily, Bunorans, Varnika, Neela, Justin.

Loving great grandmother of Soniya.

We request our relatives, friends and families to accept this notice through RIPBOOK.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

வீடு - குடும்பத்தினர்
யோகேஸ்வரி - சகோதரி

கண்ணீர் அஞ்சலிகள்