

யாழ். தெல்லிப்பழை கொல்லன்கலட்டியைப் பிறப்பிடமாகவும், இந்தியா வளசரவாக்கத்தை வசிப்பிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி ஜெயரவீந்திரன் அவர்கள் 19-05-2021 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பூதப்பிள்ளை கதிரப்பிள்ளை தம்பதிகளின் இளைய மகளும், காலஞ்சென்றவர்களான காசிநாதர் தையல்நாயகி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
ஜெயரவீந்திரன் அவர்களின் அன்பு மனைவியும்,
சுதர்சினி(பிரித்தானியா), துளசிராஜ்(பிரித்தானியா), ரவிராஜ்(இந்தியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான செல்வலட்சுமி, தங்கம்மா, காசிநாதர், கனகநாயகம் மற்றும் சிவபாக்கியம், செல்வநாயகம், வைரவநாதன், வைத்தியநாதன், சண்முகநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஜெயகிரிதாஸன், றஞ்சினிதாஸ், மோகனமூர்த்தி, காலஞ்சென்ற சந்திரகுமார், தயாளினி, வதனமாலினி ஆகியோரின் பாசமிகு அண்ணியும்,
யசிதரன்(பிரித்தானியா), கஜனி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஹஷா, லியாரா ஆகியோரின் ஆசை அம்மம்மாவும்,
யுகன் அவர்களின் அன்பு அப்பம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 20-05-2021 வியாழக்கிழமை அன்று மு.ப 10:30 மணியளவில் வளசரவாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 01:30 மணியளவில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
1978 - 1980 காலப்பகுதியில் மஹாஜனக்கல்லூரியில் உயர்தரவகுப்பு ஒன்றாக படித்தபோது நல்ல அன்புடன் பழகிய காலங்களை மறக்கமுடியாது. நாட்டுயுத்தத்தால் கடைசிவரை நேரில் பார்க்கவோ அல்லது கதைக்கவோ முடியாது போனது...