7ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
2
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மன்னாரைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பங்கிராஸ் சந்திரராசா அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு ஏழு ஆனால் என்ன
ஆயிரம் தான் கடந்து போனால் என்ன
அன்பான அப்பாவே உங்கள் மறைவால் - நாம்
வாடுவதை யார் எடுத்துரைப்பார்கள்...
உறுதுணையாய் நானிருக்க
உற்ற துணையாய் நீங்கள் இருக்க
யார் கண் பட்டதுவோ - என்னை
பரிதவிக்க விட்டு எங்கு சென்றீர் ஐயா!
ஒளிதரும் சூரியனாக
இருள் அகற்றும் சந்திரனாக
ஊர்போற்றும் நல்லவனாக
பார் போற்றும் வல்லவனாக
வாழ்வாங்கு வாழ்ந்து- எங்களை
வாழவைத்த தெய்வமே!
நின் துணையின்றி நாம் தவிக்க
என்ன பாவம் செய்தோம் என்று
எம்மை தவிக்கவிட்டு சென்றீர்களோ...
மறந்திடுமோ நெஞ்சமது வாழ்நாளில்
ஓர்முறையேனும் உங்கள் திருமுகத்தை!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
என்றும் ஆண்டவனைப் பிரார்த்திக்கின்றோம்!
உங்கள் பிரிவால் வாடும் உங்கள் குடும்பத்தினர்...
தகவல்:
குடும்பத்தினர்
May his memory be eternal ?? May you & your family find peace & comfort. RIP uncle ?