5ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
2
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மன்னாரைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பங்கிராஸ் சந்திரராசா அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
வாழ்க்கை என்பது இறைவன்
அவன்
வகுத்த வரைதானே
அடுக்கடுக்காக
ஆண்டுகள் ஐந்து சென்றன
அருகில் நீங்கள் இல்லாததால்
உங்கள்
அன்பு தனை இழந்தோமே நாம்!
அடுத்தொரு பிறப்பு உண்டென்றால்
அப்பொழுது மட்டுமல்ல- ஏழேழு
பிறப்பிலும் எமக்கே அப்பாவாய்
பிறந்திட வேண்டுகிறோம் அப்பா!
வானத்தை விட்டு நிலவையும்
வாசத்தை விட்டு மலரையும்
பிரிக்க முடியாது- அதுபோல
உங்கள் நினைவுகளை- எங்கள்
நெஞ்சை விட்டும் விலக்கமுடியாது
நெஞ்சில் உங்கள் நினைவுகளை
சுமந்தே
நெடுங்காலம் நாம் இங்கே
நிலைத்து வாழ்வோமே
வானில்
விண்மீனாய் இருந்து
எம்
வாழ்வை வளப்படுத்துவீரே!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
May his memory be eternal 🙏🏼 May you & your family find peace & comfort. RIP uncle 💐