அன்பிற்கு இலக்கணமாய் இரக்கத்திற்கு இருப்பிடமாய் ஈகை பல செய்து எல்லோருக்கும் நல்லவராய் நாணயமாய் வாழ்ந்து காந்தமாய் எம்மை ஈர்த்த உம்மை காலனவன் கவர்ந்து சென்றதேனோ நேற்று எம்முடன் நீங்கள் கதைத்தீங்கள் இன்று நாங்கள் கதைக்க நீங்கள் இல்லையே வார்த்தை தடுமாறுகின்றது நெஞ்சம் உருமாறுகின்றது நேசம் கொண்ட எங்கள் நேசன் மாமா எம்மை எல்லாம் விட்டு காத தூரம் சென்றதெனோ……… உங்கள் கனிவான பேச்சாலும் நகைச்சுவையான வார்த்தைகளாலும் எல்லோரையும் சிரிக்க வைப்பீர்கள் இனி எப்ப நாங்கள் கேட்ப்போம் உங்கள் குரலை…….. உங்கள் உறவுகள் நாங்கள் தவிக்கின்றோம்உம்மை பிரிந்து மீண்டும் வந்து விடுங்கள் எங்கள் உறவாக காலன் செய்த கோலம் இது இடை நடுவில் எங்களை தவிக்க விட்டு உங்களை கூட்டிச்சென்றுவிட்டான் நாங்கள் யாரை நோவது செய்வதறியாமல் நிக்கின்றோம் நல்லவர் பெயர் விளங்கும் அவனியிலே அன்பான உங்கள் பெயரும் விளங்கும் உங்கள் ஆத்மா சாந்தி அடைய ஆண்டவனை பிராத்திக்கின்றோம்…….
திரு. நேசலிங்கம் அவரது சிறுவயதில் பாலர்பாடசாலையை வடலியடைப்பிலும் ஆரம்பக் கல்வியின் முதலாண்டுகளை பண்டத்தரிப்பு இந்துக்கல்லூரியிலும் என்னுடன் பயின்று பின்னர் விளானுக்கு இடம்பெயர்ந்தார். அதன்பின்...