
யாழ்ப்பாணம் பெரிய கோவில் பேராலயம் பங்கில் கடந்த பல வருடங்களாக மிகச் சிறந்த பொதுநிலை சீடத்துவப் பணியாளராகப் பணியாற்றிய திரு P.F.J தேவநாயகம் தேவநாயகம் அங்கிள் – நன்கு பரிச்சயமான பெயர், அனைவரோடும் புன்னகையோடு, அன்போடு பழகுவீர்கள். வேதாகமம் தாங்கியவராய், ஆலயத்துக்கு வருவீர்கள். ஆலயப் பணிகளில் பம்பரமாக சுழன்று சுழன்று, அடுத்தவரை உற்சாகப் படுத்துவீர்கள். அன்பியம் சிறப்பாக இயங்க, நீங்கள் உழைத்தது மட்டுமல்ல, அடுத்தவரையும் பணிசெய்ய இடைவிடாது தூண்டுவீர்கள். அன்பிய சமையல், அன்பியப் பொங்கல், அன்பிய ஞாயிறு, அன்பிய வாரம், அன்பிய சிறப்புத் திருப்பலி, அன்பியப் பணிகள், அன்பிய களத் தரிசிப்பு – எதுவாக இருந்தாலும் நீங்கள் முன்னின்று உழைப்பீர்கள். பங்கு அருட்பணிச் சபையிலும், புனித வின்சென்ட் டி போல் சபையிலும், மரியாயின் சேனை பிரசீடியத்திலும், யாழ்ப்பாணம் பெரிய கோவில் பேராலய மூத்தோர் அமைப்பிலும், திருக்குடும்ப பொதுநிலை அமைப்பிலும் மகத்தான பணிகள் செய்தீர்கள். உங்கள் பணிகளால் திருஅவை இறையாட்சி கண்டது. திருமுழுக்கு அழைத்தலை பிரமாணிக்கமாய் வாழ்ந்தீர்கள். உலகிற்கு ஒளியாகவும், சாரமுள்ள உப்பாகவும், புளிக்காரமாகவும் ஊடுருவி, இறையாட்சி மலர்ந்திட முன்னின்று உழைத்தீர்கள். நன்றியோடு நினைக்கின்றோம். நம்பிக்கை நல் ஊழியனாய், விண்ணக விருந்தை சுவைத்திடுங்கள். இறைவனின் பாதத்தில் நித்தியமாக இளைப்பாறுங்கள். May your soul rest in peace, Uncle.