Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 05 AUG 1946
மறைவு 23 FEB 2025
அமரர் P. F. J. தேவநாயகம்
ஓய்வுநிலை பொறியியலாளர்(கல்வித் திணைக்களம். யாழ்ப்பாணம், கிளி நொச்சி, திருகோணமலை, மன்னார்)
வயது 78
அமரர் P. F. J. தேவநாயகம் 1946 - 2025 நாரந்தனை, Sri Lanka Sri Lanka
Tribute 12 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

ஆண்டவரே நீர் தேர்தெடுத்த மக்களின்
நல்வாழ்வை நான் காணும்படி செய்யும்(தி.பா 106:5)

யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், இல. 4A, அச்சுக்கூட வீதி யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும், தற்போது பிரித்தானியா லண்டன், Gloucester, Lancaster ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த P. F. J. தேவநாயகம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்பு அப்பா...

உயிர் பிரிந்து ஓராண்டு உருண்டோடி மறைந்தாலும்,
உங்கள் திருமுகம் எங்கள் விழிகளில் நீங்காமல் வாழ்கிறது.
 வார்த்தைகள் மௌனமாகிப் போனாலும்,
எங்களின் கண்ணீர் துளிகள் இன்றும் உங்கள் நினைவுகளையே தேடுகின்றன.

அம்மாவின் பிரிவுக்குப் பின்,
நான்கு ஆண்டு காலத் தனிமைப் பயணத்தை முடித்துவிட்டு,
எமக்காகக் கடல் கடந்து நீங்கள் லண்டன் வந்த அந்தப் பத்து மாதங்கள் - எங்கள்
புலம்பெயர் வாழ்வின் மறக்க முடியாத வசந்த காலம்!
பேரப்பிள்ளைகளின் மழலையிலும்,
எங்கள் அரவணைப்பிலும் நீங்கள் திளைத்த அந்தத் தருணங்கள்,
எங்களின் என்றும் அழியாத பொக்கிஷங்கள்.

உறவுகள், உற்ற நண்பர்கள் அனைவரினதும் சபைகளிலே
 நீங்கள் பங்கு கொள்ள மறந்ததில்லை.
எந்தச் சபையிலும் நீங்கள் அதற்கேற்ற நாகரிகத்தில் உடையணிந்து,
புன்சிரிப்போடும் செந்தழித்த முகத்தோடும் பங்குகொள்ளும்
பாங்கை இனி என்று காண்போம் அப்பா!

"உடைந்த இருதயமுள்ளவர்களுக்கு கர்த்தர் அருகில் இருக்கிறார்"
என்று எங்களைத் தேற்றிய நீங்களே,
ஒரு ஞாயிற்றுக்கிழமை மதிய வேளையில்,
எவ்வித நோயுமின்றி, நோவுமின்றி அமைதியாக
ஆண்டவரின் மடியில் இளைப்பாறச் சென்றீர்கள்.
அந்த நொடிப்பொழுதில் நிலை குலைந்து போனோம்...

உங்கள் நினைவுகளைச் சுமந்து கொண்டு
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
என நாங்கள் அனைவரும் இன்றும் மூச்சற்று நிற்கிறோம்.

"நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாய் இருக்கிறேன்"
என்ற இறைவாக்கின் நம்பிக்கையில்,
நீங்கள் கர்த்தருக்குள் இளைப்பாறுகிறீர்கள்.
மீண்டும் ஒருமுறை விண்ணகத்தில் உங்களைச் சந்திக்கும் வரை,
நீங்கள் காட்டிய விசுவாசமே எங்கள் வாழ்வின் ஒளியாக அமையட்டும்.

உங்கள் ஆத்துமா கர்த்தருக்குள் நித்திய
இளைப்பாற்றி அடையட்டும்.

இவ்வண்ணம்: சகோதரர், மைத்துனர்,
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்,
உறவினர்கள் மற்றும் நண்பர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

Photos