யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், இல. 4A, அச்சுக்கூட வீதி யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும், தற்போது பிரித்தானியா லண்டன், Gloucester, Lancaster ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட P. F. J. தேவநாயகம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
நாரந்தனை தந்த நாயகன்- தேவநாயகன்
நாளும் பொழுதும் இறை நாமம் துதித்து
நல்ல கிறிஸ்தவ வாழ்வை வாழ்ந்து காட்டியவர்.
அருள்நிறை மந்திரத்தை அனுதினமும் செபித்து
அந்த அன்னையின் மடியினிலே அமைதிகொள்ளச் சென்றீரோ
எங்கள் உறவுகளுக்கு வைரமாய்
வந்த வைரக்கல் நீங்கள்
வெள்ளைச் சிரிப்போடு கனிவாகப் பேசி
காரியமாற்றும் கனவான் நீங்கள்.
உற்றார் உறவினர் அயலவர்
நண்பர்களின் நல்லது கெட்டதற்கெல்லாம்
தவறாது சென்று நலன் விசாரித்ததை
நன்றியோடு நினைக்கின்றோம்
அப்பா என்றழைத்த பிள்ளைகளை
அந்தரிக்க விட்டு எங்கு சென்றீர்
வெறுமையை உணர்ந்து வெம்பி அழுகின்ற
பேரக்குழந்தைகளை தனிமையில் விட்டு விட்டு
தனித்தேசம் சென்றீரோ
நேற்றுவரை சிரித்து பேசிய உங்கள்
ஓசை மௌனித்துவிட்டது.
அயர்ந்து விடாது அனுதினமும் நடந்து நடந்து
ஆலயம் சென்ற உங்கள் கால்கள் ஓய்ந்து விட்டது
என்றென்றும் ஆண்டவன் அடியில்,
அமைதிகொள்ள வேண்டுகிறோம்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
Our deepest condolences on your loss. Your family is in our thoughts and prayers. Edna marianayagam family Soodaipilli family