யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், உரும்பிராயை வதிவிடமாகவும் கொண்ட நீக்கிளஸ் றணசிங்கம் அமலதாஸ் அவர்களின் நன்றி நவிலல்.
அன்னாரின் மறைவுச்செய்தி கேட்டு எங்கள் இல்லங்களுக்கு வருகை தந்து எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், திருவுடல் பார்வைக்கு வைக்கப்பட்ட போது எமது இல்லத்திற்கு வருகை தந்து இறுதி அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், இறுதிநிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கும், அருட்சகோதரர், சகோதரிகளுக்கும் மற்றும் தொலைபேசி மூலமாகவும், சமூக வலைத்தளங்கள் ஊடாகவும் துயரத்தில் பங்கு கொண்ட உறவுகளுக்கும் மேலும் பல்வேறு வழிகளில் உதவி நின்ற அன்பான உறவுகள், நண்பர்கள், நண்பிகள் அனைவருக்கும் எமது குடும்பத்தின் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
உங்களை மறக்க முடியவில்லை றணசிங்கம் அண்ணை. உதவிகளுக்கு மனமுவந்த நன்றி. தங்கள் ஆன்மா ஆண்டவரில் இளைப்பாறட்டும். துயருறும் உறவுகளுக்கு இறைவன் ஆறுதலை அளிப்பாராக.