யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், உரும்பிராயை வதிவிடமாகவும் கொண்டிருந்த நீக்கிளஸ் றணசிங்கம் அமலதாஸ் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பின் திரு உருவே
ஆருயிர் அப்பாவே
உம்மை பிரிந்த துயர்
எம்மையிங்கு வாட்டுதையா
ஆண்டொன்று மறைந்தாலும்
உம் நினைவை மறவாமல்
ஏங்கித் தவிக்கின்றோம்
எம்மை தேற்ற வாருமப்பா
உலகில் நாம் வருவதற்கும்
வளமோடு வாழ்வதற்கும்
நீங்கள் செய்த நன்மையெல்லாம்
நெஞ்சார நினைக்கின்றோம்
எமக்கு மட்டுமன்றி பிறருக்கும்
உதவி செய்தீரே
உம்மைப்போலவே நாமும் வாழ்ந்திட
உம் அருளை தருவீரப்பா
புன்னகையோ மாறவில்லை
புன்சிரிப்பும் மறையவில்லை
உம் உருவே
என்னாளும் எம்நெஞ்சில் தோன்றுதப்பா
கண்கள் கலங்கிநாம்
கண்ணீர் வடித்தாலும்
கடவுளிடம் சென்றுள்ளீர்
என்பதால் மகிழ்கின்றோம்
காலம் பல கடந்தாலும்
நாம் இங்கு வாழும்வரை
உம் நினைவு எம் நெஞ்சில்
என்னாளும் அழியாதப்பா
ஆண்டவரின் அருகிருந்து
அனுதினமும் நீர் வாழ தினம்தோறும்
செபிக்கின்றோம் அன்புநிறை
அப்பாவே...
உங்களை மறக்க முடியவில்லை றணசிங்கம் அண்ணை. உதவிகளுக்கு மனமுவந்த நன்றி. தங்கள் ஆன்மா ஆண்டவரில் இளைப்பாறட்டும். துயருறும் உறவுகளுக்கு இறைவன் ஆறுதலை அளிப்பாராக.