6ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் நவரெட்ணம் சந்திரகாந்தன்
(ராஜன்)
உரிமையாளர்- NAVA EQUIPMENT Company
வயது 59
Tribute
12
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், நயினாதீவை வதிவிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நவரெட்ணம் சந்திரகாந்தன் அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி.
நற்பண்பின் பிறப்பிடமாய் பாசத்தின் ஒளியுருவாய்
மலர்ந்த எம் ஆருயிர்த் தலைவா!!!
எம்மையெல்லாம் தவிக்கவிட்டுச் சென்று
ஆறாண்டு காலம் வந்ததோ...!!!
எம்மவர் விழிகளில் நீர் ஓடிக் கொண்டே
நினைவலைகளால் எம் உள்ளம் வாடுதே அப்பா!
பாசத்தின் கருவியாய் பண்பின் சிகரமாய்
அன்பின் திருவுருவாய் எதை நீர் செய்தாலும்
கண் போல எமை எல்லாம் காத்து
யாவருக்கும் ஆசை மொழி கூறி
அரவணைத்து பேணிக் காத்த எம் தெய்வமே!
ஆறு ஆண்டுகள் ஓடி மறைந்தாலும்
உங்கள் நினைவுகள் எங்கள் மனதில்
என்றென்றும் நிறைந்திருக்கும்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!
தகவல்:
குடும்பத்தினர்