5ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் நவரெட்ணம் சந்திரகாந்தன்
(ராஜன்)
உரிமையாளர்- NAVA EQUIPMENT Company
வயது 59
Tribute
12
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், நயினாதீவை வதிவிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நவரெட்ணம் சந்திரகாந்தன் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு ஐந்தாகியும்
எங்களால் ஆறமுடியவில்லை
உங்கள் பிரிவால்
வடியும் கண்ணீரும் காயவில்லை
பாசமழை பொழிந்து
நேசமாய் எமை வளர்த்து
துணிவுடனே நாம் வாழ
வழியதனைக் காட்டிவிட்டு
எமைவிட்டு சென்றதெங்கே?
"காலங்கள் கடந்து போகும் ஆனால்
கண்மணியே அப்பா உன் நினைவுகள் மட்டும்
காலம்தனை வென்று எம்மிடத்தில் நிற்கும் - எம்
கண்ணிறைந்த கண்ணீரோடு அப்பா...!
உங்களை எம் வாழ்நாள்
உள்ளவரை எம் இதயத்தில்
வைத்து வாழ்வோம்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்