1ம் ஆண்டு நினைவஞ்சலி
மண்ணில் 14 NOV 1942
விண்ணில் 18 MAY 2021
அமரர் நவரத்தினசிங்கம் கிருசாம்பாள்
ஓய்வுபெற்ற வர்த்தகப் பாட ஆசிரியை
வயது 78
அமரர் நவரத்தினசிங்கம் கிருசாம்பாள் 1942 - 2021 நயினாதீவு 4ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 17 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். நயினாதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சிவலிங்கப்புளியடியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நவரத்தினசிங்கம் கிருசாம்பாள் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 06-06-2022

உயிருக்குள் உயிரான ஒளியின் திருமுகமே
வாசமலராய் வந்து மணம் பரப்பிவிட்டு
வீசும் காற்றோடு கலந்திட்ட மாயமென்ன!

உலகையே எங்களுக்கு தந்தாலும்
உங்களை போல் இனை ஆகுமா- அம்மா
உங்கள் கருவிலே சுமந்து
எங்களுக்கு உயிர்கொடுத்தாய்...
இன்று நீங்கள் இன்றி எங்கள் உயிர்
விலகி நிற்கின்றது அம்மா...

ஆண்டு ஒன்று கடந்தாலும்
அமைதியின்றி வாழ்கிறேன்
உங்கள் நினைவுடனே அம்மா!
 எல்லோரையும் தவிக்கவிட்டு
ஏன் இந்தப் பிரிவைத் தந்தாய்!

அன்புடனும் பாசத்துடனும்
எம்முடன் கூடிக் குலாவி மகிழ்ந்திருந்து
தெய்வமாகி விட்டாயே!
உன் நினைவில்
இன்றுவரை வாடுகின்றோம்... 

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம்...

அன்னாரின் முதலாம் ஆண்டு நிகழ்வு 06-06-2022 திங்கட்கிழமை அன்று இல: 831/27, K.K.S. வீதி, யாழ்ப்பாணத்தில் உள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெறும்.

குறிப்பு: கணவரின் ஆசையை நிறைவேற்றும் விதமாக 18-04-2021 அன்று நயினாதீவு அன்னை தாகசாந்தி மணிமண்டபத்தினை எங்களின் பாசமிகு அன்னை அவர்கள் திறந்து வைத்தார்.

தகவல்: குடும்பத்தினர்