5ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் ஆறுமுகம் நற்குணம்
(குணம், Toronto நற்குணம்)
முன்னாள் உப தபால் அதிபர், பவானி சவுண்ட் சர்வீஸ் உரிமையாளர்
வயது 84
Tribute
3
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். வதிரி கரவெட்டி கதிர்காம கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஆறுமுகம் நற்குணம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் அன்பு குலதெய்வமே
பாசம் என்னும் பெரும் கயிற்றால் எம்
அனைவரையும் கட்டி அரவணைத்து
முன்னேற்றி வைத்த எமது தந்தையே
விழுதுகள் நாம் விம்முகின்றோம்
ஆண்டு ஐந்தாகியும் ஆறவில்லை எம்மனம்
விழிகளில் கண்ணீர் காயவில்லை
காலங்கள் கடந்தாலும் மாறாது
உங்கள் நினைவலைகள்
எங்கள் துன்பங்கள் அனைத்தையும்
உங்கள் இதயத்துள் தாங்கி
உறக்கத்திலும் விழிப்பிலும் எம்மைக்
கண்ணிமைபோலக் காத்து
ஒளிமிகுந்த வாழ்க்கைப் பாதையில்
எம்மை இட்டுச் சென்ற தந்தையே
இன்னும் நீங்கள் காட்டிய பாதையிலேயே
உங்கள் நினைவுகளைச் சுமந்தபடியே நாம்
வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் அப்பா
தகவல்:
குடும்பத்தினர்