1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் ஆறுமுகம் நற்குணம்
(குணம், Toronto நற்குணம்)
முன்னாள் உப தபால் அதிபர், பவானி சவுண்ட் சர்வீஸ் உரிமையாளர்
வயது 84
Tribute
2
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். வதிரி கரவெட்டி கதிர்காம கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஆறுமுகம் நற்குணம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
நீங்கள் இருக்கும் போது
கற்றுக் கொண்டதை விட
இல்லாத போது அதிகமாகவே
கற்றுக் கொண்டோம்
எத்தனை உறவுகள்
எம் அருகிலிருந்தாலும்
எம் அப்பாவின் வெற்றிடத்தை
யாராலும் ஈடுசெய்யமுடியாது
அன்போடு பாசத்தையும் எமக்களித்து
நான் தான் என்று பண்புடனே நிமிர்ந்து நின்று
எம்மை நேசத்துடன் கட்டியணைத்து
நல்வழி காட்டிய எங்கள் அப்பாவே!
நீங்கள் மறைந்து பன்னிரு திங்கள் ஆனால் என்ன?
எம்மை விட்டு நினைவுகள்
என்றுமே மறந்து விடப்போவதில்லை!
உங்கள் ஆத்மா சாந்தியடைய எல்லாம்
வல்ல
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்