Clicky

2ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 15 JUL 1934
இறப்பு 23 JUN 2022
அமரர் பொற்கொடி நாராயணபிள்ளை
வயது 87
அமரர் பொற்கொடி நாராயணபிள்ளை 1934 - 2022 கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 18 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Walthamstow ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பொற்கொடி நாராயணபிள்ளை அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டுகள் இரண்டானதம்மா
ஆறாத உன் ஞாபகங்கள்
மீண்டும் மனதில் உருண்டோட
மீள முடியாது தவிக்கின்றோம்
மெளனமாய் அழுகின்றோம்

உன் அன்பான பேச்சும்
இரக்கம் கொண்ட உள்ளமும்
கனிவான எண்ணமும்
உன் போல துணையும்
யாருமில்லை இன்றுவரை

கணப்பொழுதில் கண்மூட
உன் இறுதி மூச்சு நின்றோட
நம்ப முடியவில்லை இன்னளவும்
நீ இல்லாத வாழ்க்கையை

காலங்கள் போகலாம்
காயங்கள் மாறலாம்
நெஞ்சில் உன் நினைவுகள்
என்றும் நம்மை விட்டு நீங்காது அம்மா…

உங்கள் நினைவுகளைக்
காலமெல்லாம் சுமந்து நிற்போம் பாசமிகு
பிள்ளைகள்...

தகவல்: குடும்பத்தினர்

Photos

Notices

மரண அறிவித்தல் Wed, 29 Jun, 2022
நன்றி நவிலல் Fri, 22 Jul, 2022