5ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் நந்தகுமார் இராஜதுரை
(நந்தன்)
வயது 51
Tribute
9
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Kirchheim unter Teck ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நந்தகுமார் இராஜதுரை அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஐந்து வருடங்கள் போனாலும்
மெளனமாக மனசு அழுவதை நீங்கள் உணர்வீர்கள்
உணர்ந்து கொண்டேயிருப்பீர்கள் அப்பா!
உங்களுடன் வாழ்ந்த நிமிடங்கள்
எங்கள் வாழ்வில் சுடர்விடும் ஒளியாய் மலர்கின்றன
சிந்தை குளிர சிரிப்பொலி ஒலிக்கும்
அன்பு வதனம் எங்கே?
உங்களுக்கு நிகர் வேறு யாரப்பா?
ஐந்து வருடம் விரைந்தே போனதப்பா
நீங்கள் எங்களுடன் வாழ்வதாய் நினைத்தே
நாம் வாழ்கின்றோம்
எத்தனை ஆண்டுகள் சென்றாலும்
எம் நெஞ்சை விட்டு அகலாது
உங்கள் நினைவுகள்
உங்கள் ஆத்மா சாந்தி அடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...
தகவல்:
குடும்பத்தினர்
அன்னாரின் துயர் செய்தி அறிந்து வேதனை அடைந்தோம். அவரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறோம்.