திதி : 09-04-2023
யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Kirchheim unter Teck ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நந்தகுமார் இராஜதுரை அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
அப்பாவே அன்பானவரே
அழைக்கின்றோம் நாங்கள் இன்று
அணைத்திட வருவாயோ
அழுகையுடன் காத்திருக்கின்றோம்
நாம் இங்கு!
தப்பு செய்தால் தண்டித்து
தவறு செய்தால் மன்னித்து
தந்தைக்கெல்லாம் முன்னுதாரணமாய்
தரணியில் இருந்தவர் நீங்களே!
அம்மாவுக்கு ஒரு நல்மகனாய்
உடன் பிறப்புகளுக்கு நல்லதோர் வழிகாட்டியாய்
மனைவிக்கு சிறந்த கணவனாய்
பிள்ளைகளுக்கு நல்லதொரு அப்பாவாய்
திகழ்ந்தவர் நீங்களே!
எங்களை பாதுகாப்பாக பார்த்து
நல்லவற்றைக் கற்றுத்தந்து
நாமிங்கு நலமாய் வாழ்வதைப் பார்த்திட
நீங்கள் இல்லையே அப்பா!
என்று காண்போமோ அப்பா!!
எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அப்பா
அழியாது உங்களோடு நாம் வாழ்ந்த காலங்கள்
அதை நெஞ்சில் எண்ணியே வாழ்ந்திடுவோம் அப்பா!
உங்கள் ஆத்மா சாந்திபெற
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...
அன்னாரின் துயர் செய்தி அறிந்து வேதனை அடைந்தோம். அவரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறோம்.