1ம் ஆண்டு நினைவஞ்சலி
![](https://cdn.lankasririp.com/memorial/notice/202934/0e91c155-a9ce-4d51-8e88-b3d48a266db8/22-61fb812a61442.webp)
அமரர் நந்தகுமார் இராஜதுரை
(நந்தன்)
வயது 51
Tribute
9
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Kirchheim unter Teck ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நந்தகுமார் இராஜதுரை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டொன்று ஆனதப்பா
உங்களை இழந்து
ஆறாத யுகங்களாய் ஒவ்வொரு
கணமும்
கனத்த நாட்களாய் உங்கள்
நினைவுகளோடு கழிகிறதே அப்பா
உலகமே நீங்களென உறுதியாய்
நாமிருக்க
மனைவி பிள்ளைகளை இப்படி
தவிக்க விட்டு
ஏனப்பா விண்ணுலகம் சென்றீர்கள்
உங்கள் பிரிவை நம்பமுடியாது
தவிக்கிறோமே நாங்கள்
உங்கள் நகைச்சுவைப் பேச்சும்
சிரித்த முகமும்
உபசரிக்கும் பண்பும் உதவி செய்யும் குணமும்
அன்பான மனமும் மறக்கமுடியாது
தவிக்கிறோமே நாம்
எத்தனை உறவுகள் என்
அருகில் இறுந்தாலும்
நான் தேடும் ஒரே உறவு
நீங்கள் மட்டுமே
ஏனென்றால் நீங்கள் என்
உறவு அல்ல
என் உயிர் அப்பா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை வேண்டிநிற்கின்றோம்..
என்றென்றும் உங்கள் நினைவுடன்
வாழும் குடும்பத்தினர்
தகவல்:
குடும்பத்தினர்
அன்னாரின் துயர் செய்தி அறிந்து வேதனை அடைந்தோம். அவரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறோம்.