யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Kirchheim unter Teck ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நந்தகுமார் இராஜதுரை அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு இரண்டாகிப் போனதுவோ
அப்பா உங்கள் ஒளி முகம் மறைந்து
எங்கள் குடும்பத்தின் ஆணிவேரே
எம் நெஞ்சுக் கூட்டில் என்றென்றும் அழியாத ஓவியமே
நீங்கள் எங்களைப் பிரிந்து
ஆண்டுகள் எத்தனை ஆனாலும்
எங்கள் இதயத்துடிப்போடு கலந்தது
உங்கள் நினைவு
அழுதழுது தீர்ந்துவிடுமோ
ஆறுதல் சொல்லி போய்விடுமோ
உங்களுக்கும் எங்களுக்குமான பந்தம்
ஆண்டுகள் ஆயிரம் ஆனாலும்
நினைத்துப் பார்க்க நீங்கள்
விட்டுச்சென்ற இனிய நினைவுகள்
ஆயிரம் ஆயிரம்
எண்ணிலாக் கனவுகள்
கண்டிருந்தோம்
என்றென்றும் எங்களுடன்
இணைந்து இருப்பீர்கள் என
இடைநடுவே எம்மை தவிக்கவிட்டு
மறைந்து போனீர்களே
இனி இறைவனாய் எம்முடன்
இருந்து எம்மை வழி நடத்தி
தொடரும் குலதெய்வமே
உங்கள் நினைவோடு என்றென்றும்
வா(டு)ழும்
குடும்பம்
அன்னாரின் துயர் செய்தி அறிந்து வேதனை அடைந்தோம். அவரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறோம்.