திருகோணமலை பிரதான வீதியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட நேமிநாதன் இரட்ணராஜ் அவர்களின் நன்றி நவிலல்.
இடி விழுந்த செய்தியொன்று
எம் காதில் விழுந்ததென்ன!
இட்டுக்கட்டிய கதையென்றோ
நாம் நினைத்தோம்
இம்மியளவும் எண்ணவில்லை
இயமன் கொண்டு செல்வான் என்று!
இறைவா! என்ன சோதனை
வாழவென்று படைத்துவிட்டு
இடைமறித்துப் பறித்ததென்ன.
பதறுகிறோம், கதறுகிறோம்
பயன் எதுவும் கிட்டவில்லை.
உடைத்து வெளிவந்த
எம் அழுகையை
அடைத்து வைத்துக் காத்திருந்தோம்
முடிந்துவிடாத
உன் பயணத்தை எண்ணி
இடிந்து போய் அமர்ந்திருந்ததோம்
ஒரு உயிருக்கு ஒரு முறை
மட்டும் தான் மரணம்
ஆனால் அந்த உயிரை
நேசித்தவர்களுக்கு
தினம் தினம் மரணம்.
இயற்கை தான் இதுவென்றாலும்
ஏற்கவில்லை உங்கள் இழப்பை.
உங்கள் ஆத்மா சாந்தியடயப் பிரார்த்திக்கின்றோம்...
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.