
-
26 APR 1983 - 19 JUL 2020 (37 வயது)
-
பிறந்த இடம் : திருகோணமலை, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : கொழும்பு, Sri Lanka
திருகோணமலை பிரதான வீதியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நேமிநாதன் இரட்ணராஜ் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
நீங்காத நினைவு தந்து
நீண்ட தூரம் சென்றதேனோ?
கண்மூடி விழிப்பதற்குள் கனப்பொழுதில்
நடந்தவைகள் நிஜம் தானா - என்று
நினைக்கும் முன்னே மறைந்தது ஏனோ?
நீ இல்லையெனும் நினைவே
நெஞ்சுருக்கிக் கொல்லுதய்யா கண்களில்
திரண்டிடும் நீர் கரைத்திடுமோ காயத்தை
நீங்காத உன் நினைவுகள் எமை வந்து வாட்டுது
கண் நிறைந்த உனது தோற்றம்
கனவில் வந்து வருத்துகிறதே இன்முகம் காட்டி
எம் இல்லம் சுற்றிய நாட்களை
எப்படி மறப்போமடா!
அருகினிலே இனிமையாய் நிஜமாய்
கண் உன் உருவத்தை
நிழற்படமாய் பார்க்கும்போது நெஞ்சம்
விம்மி அழுகின்றதே
பலகோடி இன்பங்கள் இருந்தென்ன
பலநூறு உறவுகள் இருந்தென்ன
நீ பிரித்த இடைவெளியை அன்புக்குரியவனே
யார்தான் நிரப்புவாரோ
கடலின் ஆழத்தை கூடக் கண்டு விடலாம்- ஆனால்
நாம் உன்மேல் கொண்ட அன்பினை
அளந்திட முடியுமா?
உன் ஆத்மா சாந்தியடைய இறைவனைப்
பிரார்த்திக்கின்றோம்...
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
திருகோணமலை, Sri Lanka பிறந்த இடம்
-
கொழும்பு, Sri Lanka வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Photos
Notices
Request Contact ( )
