5ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் நல்லதம்பி தாமோதரம்பிள்ளை
வயது 99
அமரர் நல்லதம்பி தாமோதரம்பிள்ளை
1921 -
2021
Manippay, Sri Lanka
Sri Lanka
Tribute
14
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், ஏழாலை, கந்தரோடை, லண்டன் Mitcham ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த நல்லதம்பி தாமோதரம்பிள்ளை அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 19-05-2026
அன்பின் சிகரமே
வாழ்வின் ஒளிவிளக்கே
எம் குடும்பத்தலைவனே!
எம் வாழ்வின் வழிகாட்டிய தீபமே!
காலத்தின் கட்டளையோ- ஐயா
இன்று நீர் கடவுளாகினீர்
அருகில் இருந்தும் பார்க்க முடியாமல்- நாம்
உமை அன்றாடம் துதிக்கின்றோம்
அப்பா கலகலப்பாக பேசும்
கனிவான புன்னகையும்
பாசத்துடன் உறவாகும் உங்கள் அன்பையும்
பல்லாயிரம் ஆண்டுகள் சென்றாலும்
உங்களை நினைத்து
கண்ணீர் சொரிகின்றோம்...
எத்தனை தான் எமக்கிருந்தாலும்
ஏங்கித் தவிக்கின்றோம் உனை நினைத்து
எப்படித்தான் ஐந்தாண்டு சென்றதுவோ
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...
தகவல்:
குடும்பத்தினர்