4ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் நல்லத்தம்பி அகிலேஸ்வரன்
(காந்தி)
வயது 70
அமரர் நல்லத்தம்பி அகிலேஸ்வரன்
1952 -
2022
புங்குடுதீவு 7ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
11
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பாண்டியன்தாழ்வு கொழும்புத்துறை வீதி சுண்டிக்குளியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நல்லத்தம்பி அகிலேஸ்வரன் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
தந்தையே எங்கள் ஆருயிர் அப்பாவே
விண்ணையே நோக்கி நீ விரைந்திட்டதால்
விழிகள் நித்தம் கண்ணீரால் நிறைகிறது
கண்ணின் மணிபோல் எம்மை காத்து நின்றாயப்பா
இருளினுள் மறையும் நிழலும்
ஒளிவர உயிர்த்துக்கொள்ளும்
மறைந்து நான்கு வருடம் போயும்
மறுபடி வராததேனோ?
உம் உறவுகள் நாம் இங்கு
கதி கலங்கி நிற்போம் என்று
ஒரு கணம் நினைத்துப் பார்க்க
உமக்கு மனம் வரவில்லையோ?
காலன் அவன் ஆசை கொண்டு
கவர்ந்து சென்றானோ உம் உயிர்தனை
காலம் காலமாய் உம் நினைவால்
காத்து நிற்கின்றோம்.
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்