3ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் நல்லத்தம்பி அகிலேஸ்வரன்
(காந்தி)
வயது 70

அமரர் நல்லத்தம்பி அகிலேஸ்வரன்
1952 -
2022
புங்குடுதீவு 7ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
11
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பாண்டியன்தாழ்வு கொழும்புத்துறை வீதி சுண்டிக்குளியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நல்லத்தம்பி அகிலேஸ்வரன் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
தன்னை உருக்கி பிறருக்கு ஒளி கொடுக்கும்
மெழுகுவர்த்தி போல்
உம்மை உருக்கி எம்மை காத்து
வந்த தெய்வமே...
நீங்கள் எங்களோடு வாழ்ந்த
காலமெல்லாம் பொற்காலம் - நீவீர்
பிரிந்த காலமெல்லாம் எம் கண்களில்
நீர்க்கோலம்
இன்று நம் கண்ணீர் நிறைந்த
கண்கள் உம்மை தேட
எம் மனமோ உங்களின்
அன்புக்காய் ஏங்கித் தவிக்கிறதே!
எங்கள் செயல்கள் ஒவ்வொன்றிலும் இருந்து
வழிகாட்டும் துணை நீதான் ஐயா!
ஏங்கித் தவிக்கின்றோம் உம்மை பிரிந்து
இனி எமக்கு ஆறுதல் யார்தான் ஐயா?
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்