Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 01 MAR 1952
மறைவு 04 JUL 2022
அமரர் நல்லத்தம்பி அகிலேஸ்வரன் 1952 - 2022 புங்குடுதீவு 7ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 10 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

 யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பாண்டியன்தாழ்வு கொழும்புத்துறை வீதி சுண்டிக்குளியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நல்லத்தம்பி அகிலேஸ்வரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்பின் திருவுருவாய்
அகத்தின் ஒளிவிளக்கே -அப்பா!
 நீங்கள் எம்மை விட்டு பிரிந்து
 ஓராண்டு ஆன போதும்
உமை நாங்கள் இழந்த துயரை
 ஈடு செய்ய முடியாமல் தவிக்கின்றோம்-அப்பா!

கண்முன்னே நீங்கள் வாழ்ந்த காலம்
 கனவாகிப் போனதுவோ!
அப்பா எமை ஒரு நிமிடமும் காணாவிட்டால்
 துடித்து பதை பதைத்த நினைவுகளை
இன்னும் கண்ணீர் விழி நனைக்குதப்பா!
 எமை எல்லாம் அன்பால் அரவணைத்து
 பண்பால் வழிநடத்திய அந்த நாட்கள்
 எமை விட்டு நீண்டதூரம் சென்றாலும்-அப்பா
மாறாது ஒருபோதும் உம் கொள்கை
 நம் வாழ்வில் என்றும் மறையாது
 உங்கள் நினைவு
 எம் மனதை விட்டு அப்பா!!!

ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!


வீட்டு முகவரி:
இல.123, கொழும்புத்துறை வீதி,
பாண்டியந்தாழ்வு,
சுண்டிக்குழி,
யாழ்ப்பாணம்.

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்