யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Herning ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த நளினி ரவீந்திரகுமார்(பவா) அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 02-03-2026
பவா என்னை விட்டுப்பிரிந்து
பத்து வருட காலங்கள் கழிந்தாலும்,
உங்கள் நினைவுகள் மட்டும்
உறைந்து போயின!
என் உயிராய் இருந்தவளே,
உன் அழகான சிரிப்புச் சத்தமும்
அன்பான பேச்சும்
இன்றும் என் காதில்...
மறைந்தாய் நீ,
மறையவில்லை என் அன்பில்!
மீண்டும் பிறப்பு ஒன்றிருந்தால்,
நீயே என் மனைவியாய் வர வேண்டும்!
என் நிழலாய் இருந்த உங்களுக்கு,
கண்ணீரைத் தருகின்றேன்...
மன்னித்து விடுங்கள்!
நீங்கள் இல்லாத இந்த
வாழ்க்கை
வெறும் பாலைவனம்.
வாழ்க்கை
முழுவதும் அன்பை வழங்கி,
நிழலாய் கூடவே வந்த என்
அன்பு மனைவிக்கு,
நான் கொடுக்கும்
கவிதையின் நினைவுகள் மட்டுமே
உங்கள்
மீதான என் அன்பின் வெளிப்பாடு.
காலம் காயத்தை மாற்றலாம்,
ஆனால் உங்களால் ஏற்பட்ட
வெற்றிடத்தை யாராலும் நிரப்ப
முடியாது செல்லா.
உங்கள் ஆத்மா சாந்தியடைய
என்றென்றும் இறைவனை
பிரார்த்தித்துக் கொண்டிருக்கின்றேன்!
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
என்றும் உங்கள் நினைவில்
கணவர்,
மகள், மருமகன், பேரப்பிள்ளைகள்...
வானத்தில் ஓர் நட்சத்திரம் கூடி விட்டது. அது உங்கள் மனைவியாகத் இருக்க வேண்டும். உன் நினைவில் வாழும் ரவிக்கு எங்கள் ஆறுதல் உரித்தாகுக. ??