Clicky

பிறப்பு 29 JUL 1928
இறப்பு 22 APR 2019
அமரர் நாகேஸ்வரி நடராஜா 1928 - 2019 குரும்பசிட்டி, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

self 28 APR 2019 United Kingdom

அமரர் திருமதி நாகேஸ்வரி நடராஜா , என்னால் கரனின் அம்மா என்று அழைக்கப்பட்டவர். எனது கல்வியில் ஒன்பதாம் வகுப்பளவில் ஏற்பட்ட சிறந்த மாற்றத்தில் இவருக்கும் இவரது பிள்ளைகளில் மூவரது (கரனின் இரு அக்காமார் & கரண் ) பங்களிப்பும் மிக முக்கியமானது. அதிகாலை நான்குமணிக்கு கரனுக்கு வகுப்புக்கள் நடைபெறும். இவ்வகுப்புக்களில் நானும் பங்குபற்றுவதற்கு என்னை கேட்டவர் கரண் , உற்சாகம் தந்தவர் கரனின் அம்மா. வகுப்புகளை இவர்களது வீட்டில் நடைபெற அனுமதி தந்தவரும் இவரே. அதிகாலையில் எழுந்து பால் கறந்து மிக சுவையான Cஒffஏ எமக்கும், எமது ஆசிரியருக்கும் தந்து வகுப்பை ஆரம்பித்து வைப்பவரே இவர் தான். அடிக்ககடி வந்து நாம் ஒழுங்காக படிக்கிறோமா என்றும் கவனித்து செல்வார். மாலை வகுப்பில் தேநீருடன் சிற்றுண்டியும் கிடைக்கும். எனது வாழ்வில் ஏற்பட்ட முக்கியமான திருப்புமுனையில் மறக்க முடியாதவரும் , மறக்க கூடாதவரும் அமரர் திருமதி நாகேஸ்வரி நடராஜா (கரனின் அம்மா). அம்மா உங்கள் ஆத்ம சாந்திக்காக ஆண்டவனை பிராத்திக்கிறேன். அன்னாரை இழந்து துயரில் மூழ்கியிருக்கும் எனது நண்பன் கரனுக்கும், அவரின் சகோதரிகள், மற்றும் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை என் சார்பிலும் , எமது குடும்ப உறுப்பினர்கள் சார்பிலும் தெரிவித்துக்கொள்கிறேன். துயரில் பங்குகொள்ளும் ஜெயஸ்ரீ